ஓர் உணவுவிடுதியில் ஒரு வயதான தகப்பனும் இளம் வயது மகனும் உணவருந்த வந்தனர்!
தந்தைக்கு வயதானதால் அவரால் கைநடுக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை! இதனால் உணவை எடுத்து சாப்பிட இயலவில்லை! அதனால் மகன் ஊட்டி விட முயற்சித்தான்! அதையும் அவர் அனுமதிக்கவில்லை!

தானே சாப்பிட முற்பட்டு உணவை மேலேயும் கீழேயும் சிந்திக்கொண்டு அந்த
பகுதியையே அசுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்! வாயில் ஜொள் வேறு! ஆனால்
அந்த மகனோ சற்றும் அருவெறுப்பு இன்றி பொறுமையை இழக்காமல் அவரது வாயை, உடையை
எல்லாம் சுத்தம் செய்ததும் இல்லாமல் கழிவறைக்கும் பொறுப்பாக கூட்டி சென்று
சுத்தம் செய்து அழைத்து வந்தான்!
இதையெல்லாம் அங்கிருந்த கூட்டம் அருவெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததும் இல்லாமல் சிலர் வெளிப்படையாக முணுமுணுக்கவும் செய்தனர்! சிலரோ அந்த பையனை கேலியுடன் பார்த்து சிரித்தவாறு இருந்தனர்!
இதையெல்லாம் பொருட்படுத்தாத பையன் பில் தொகையை செலுத்திவிட்டு கிளம்பினான்! வாசல் வரை வந்த போது ஒரு கணீரென்ற குரல் தடுத்து நிறுத்தியது!
"தம்பி! நீ சிலவற்றை இங்கே விட்டு செல்கிறாய்!"
என்று
ஒரு நடுத்தர வயதை தாண்டிய ஒரு நபர் தான் அவ்வாறு அழைத்தது!
பையனோ குழப்பத்துடன் சொன்னான்!
"நான் எதுவும் விட்ட மாதிரி தெரியலையே!"
அதற்கு அவர் சொன்னார்!
"இரண்டு விசயங்களை நீ விட்டு செல்கிறாய்!
முதலாவது இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு படிப்பினை!
இரண்டாவது இங்கே இருக்கும் என்னை போன்றவர்களுக்கு நம்பிக்கை! "
அங்கிருந்த அத்தனை பேரும் வாயடைத்து நின்றனர்!

No comments:
Post a Comment